மிஸ்ரா இல்லைன்னா அமலாக்கத்துறை செயல்படாதா? மத்திய அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்

அமலாக்கத்துறையின் இயக்குனராக எஸ்.கே.மிஸ்ரா நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். இவருடைய பணிக்காலம் ஜூலை 31ம் தேதி முடிய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவின் பணிக்காலத்தை நீட்டிக்க மத்திய அரசு அனுமதி கோரியுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் “எஸ்.கே.மிஸ்ரா இல்லையென்றால் அமலாக்கத்துறை செயல்படாதா?” என நீதிபதிகள் காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

மத்திய அரசின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் எஸ்.கே.மிஸ்ராவை தொடர்ந்து இயக்குனர் பொறுப்பில் நீட்டிக்க மத்திய அரசு முயற்சி செய்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News