சூப்பர்ஸ்டார் பட்டத்தை விட்டுக்கொடுத்த ரஜினி – ரஜினியின் குட்டிக்கதை

ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஒரு குட்டிக்கதை மூலம் சூப்பர்ஸ்டார் பட்டத்திற்காக எழுந்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகர் ரஜினி.

ரஜினி சொன்ன அந்த குட்டிக்கதை… ‘காட்டில் சிறிய மிருகங்கள் எப்போதும் பெரிய மிருகங்களை தொல்லை செய்யும். உதாரணத்துக்கு, காகம் எப்போதும் கழுகை சீண்டிக் கொண்டே இருக்கும். ஆனால், கழுகு எப்போதுமே அமைதியாகவே இருக்கும். கழுகைப் பார்த்து, காகம் உயரமாக பறக்க நினைத்தாலும், காகத்தால் அது முடியாது. கழுகு தன் இறக்கையை கூட ஆட்டாமல் எட்ட முடியாத உயரத்தில் பறந்துகொண்டே தான் இருக்கும்’ என்று அவர் கூறினார்.

மேலும், சூப்பர்ஸ்டார் பட்டத்தை தான் விரும்பியது இல்லை என்றும், பல வருடங்களுக்கு முன்பே, அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக விழாவில் நடிகர் ரஜினி பேசியுள்ளார்.

இதன் மூலம், சூப்பர்ஸ்டார் பட்டத்தை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் தனது உயரத்தை எவராலும் எட்டமுடியாது என்று ரஜினி சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

RELATED ARTICLES

Recent News