அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர், 35 வயதான மைக்கேல் கோல்ஹோஃப். இவரை அறிய வகை உண்ணி ஒன்று கடித்ததால் மோசமான நோய்கள் ஏற்பட்டு அவரது 2 கைகளும், 2 கால்களின் சில பகுதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் மைக்கேலை உண்ணி ஒன்று கடித்ததால் காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டன. சில தினங்களில் மைக்கேலின் உடல்நிலை மேலும் மோசமடைந்து படுக்கையில் இருந்து எழுந்திரிக்ககூட முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு , சிகிச்சையில் இருக்கும்போதே உடல் உறுப்புக்கள் செயலிழக்க தொடங்கியது.
வென்டிலேட்டர் உதவியுடன், ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்பட்டபோதும் அவரது உடலில் பல இடங்களில் ரத்த ஓட்டம் நின்றது.இதனால் மைக்கேலின் 2 கைகளும், 2 கால்களின் சில பகுதிகள் துண்டிக்கப்பட்டது.
டைபஸ் என்ற பாக்டீரியா மூலம் இந்த மோசமான நோய் பரவுகிறது. உலகில் மொத்தம் 2500க்கும் மேற்பட்ட உண்ணி இனங்கள் உள்ளன.அமெரிக்காவில் மட்டுமே 300க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.