பொதுமக்களுக்கு ஏசியை ஓசியில் வழங்கிய அமெரிக்கா!

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. தினமும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வெப்பஅலையில் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளனர். பலர் நோய் தாக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அமெரிக்காவில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்து கடும் வெப்ப அலை வீசும் என்றும் இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். வெயில் கொடுமையால் பொதுமக்கள் வீடுகளில் ஏ.சி. அறையில் முடங்கி கிடக்கிறார்கள். இந்த வெயிலில் இருந்து தப்பிக்க சிகாகோ, நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்களுக்காக குளிரூட்டும் மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

RELATED ARTICLES

Recent News