ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரஜினிகாந்தின் குட்டிக்கதையும் அவரது பேச்சும் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.
இந்நிலையில் தனது குடிப்பழக்கத்தை பற்றியும் அந்த நிகழ்ச்சியில் இவர் பகிர்ந்துள்ளார். அதாவது, தனக்கு மதுபழக்கம் இல்லாமல் இருந்து இருந்தால் சமுதாயத்திற்கு நிறைய நல்ல விஷயம் செய்திருப்பார் என்றும், தான் செய்த மிகப்பெரிய தவறு, மதுப்பழக்கம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும், குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் போது, உடனே வயிறு நிறைய சாப்பிட்டு தூங்கி விடுங்கள்’ என்று குடியிலிருந்து வெளிவர நினைப்பவர்களுக்கு தனது டிப்ஸை கூறியிருக்கிறார் நடிகர் ரஜினி.