இன்ஸ்டாகிராமில் ரீல்ஸில் அதிக லைக்குகள் பெற வேண்டும் என்பதற்காக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் அம்ரோஹோ பகுதில் உள்ளா பெட்ரோல் பங்கில் தனது ராயல் என்ஃபீல்ட் பைக்கை பெட்ரோலில் குளிப்பாட்டியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் ரீல்ஸ் வீடியோ போடுவதற்காக 8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.