பாகிஸ்தானின் தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது.
பஜாவுர் மாவட்டத்தின் கார் நகரில் ஜாமியத் உலமா இஸ்லாம் மாநாடு நேற்று நடைபெற்றது. 400-க்கும் மேற்பட்டோர் கலந்த கொண்ட மாநாட்டில் திடீரென தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.
இதில் ஜாமியத் உலமா இஸ்லாம் பாஸில் அமைப்பின் தலைவர் மவுலானா ஜியாவுல்லா ஜான் உள்பட பலரும் கொல்லப்பட்டனர். 10 கிலோ வெடிபொருள்களை இந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வாளர் அக்தர் ஹயாத் கான் தெரிவித்தார்.
இதுவரை இந்த குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100- க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த ஒரு குழுவோ அல்லது தனி நபரோ பொறுப்பேற்கவில்லை.