இதற்கு முடிவே இல்லையா? பொதுமக்கள் வேதனை!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி விலை ரூ.210 விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக 70 முதல் 75 லாரிகளில் தக்காளி விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று கோயம்பேடு சந்தைக்கு 35 லாரிகளில் மட்டும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

இதன் காரணமாக மொத்த விலையில், கிலோ தக்காளி ரூ.160-க்கும், சந்தையிலுள்ள சில்லரை விற்பனை கடைகளில் ரூ.180-க்கும், வெளியிடங்களிலுள்ள சில்லறை விற்பனை கடைகளில் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையின் புறநகர் பகுதிகள், திருவள்ளூர் உள்ளிட்ட சில இடங்களில் ரூ.210 வரையும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சில்லறை விற்பனை கடைகளில் 100 கிராம், 200 கிராம் என்ற அளவில் தக்காளி விற்கப்படுகிறது. பல மளிகை கடைகளில் தக்காளி விற்பதையே நிறுத்திவிட்டனர்.

வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கோயம்பேடு சந்தையில் மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News