நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் அருகே உள்ள அணைத்தலையூர் கிராமத்தை சேர்ந்தவர் மிக்கேல் ராஜ். இவர், தனது மனைவி மற்றும் 4 வயது மகன் சேவியர் உடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த பாத்திரங்களைக் கொண்டு, சிறுவன் சேவியர் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாரா விதமாக, எவர்சில்வர் பாத்திரம் ஒன்று, சிறுவனின் தலையில் மாட்டிக் கொண்டது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பாத்திரத்தை அகற்றுவதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தும் பாத்திரத்தை அகற்ற முடியாததால், அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து சென்றனர்.
மருத்துவர்களின் முயற்சியும் வீணாகிய பிறகு, தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், தங்களிடம் இருந்த பிரத்யேக கருவிகளை கொண்டு, பாத்திரத்தை அகற்றினர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.