தானியக்கிடங்குகளை தரைமட்டம் ஆக்கிய ரஷியா ! அடுத்தது கோதுமைக்கிடங்கா ?

ரஷ்யா ட்ரோன் மூலமாக உக்ரைனில் உள்ள துறைமுகங்கள் மற்றும் தானியக் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்துவதால் அங்குள்ள தானியக் கிடங்குகள் தீக்கு இரையாகி வருகின்றன.தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகிய பிறகு, உக்ரைன் கருங்கடல் துறைமுகம் நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா வாடிக்கையாக வைத்து வந்தது. இந்த நிலையில், தற்போது ரஷ்யா – உக்ரைன் போர் உச்சக்கட்டத்தில் உள்ளதால் ஒவ்வொரு இலக்காக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.

தலை நகரங்களில் குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா ராணுவத்தின் பார்வை தற்போது உக்ரைனில் உள்ள துறைமுகங்கள் மற்றும் தானிய சேமிப்புக் கிடங்குகளை நோக்கித் திரும்பியுள்ளது. இந்நிலையில் உக்ரைனின்தெற்கில் உள்ள துறைமுகம் மற்றும் தொழில்துறை வசதிகள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனருகில் இருக்கக் கூடிய தானிய சேமிப்புக் கிடங்குகள் தீக்கு இரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாக இஸ்மயில் துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோதுமை மற்றும் சோளம் ஏற்றுமதியில் உக்ரைன் முன்னிலையில் உள்ள நிலையில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News