மனைவி டீ போட்டுத்தர மறுத்ததால் கோபமடைந்த கணவன் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தின் ததிபூர் பகுதியில் வசித்துவரும் மோஹித் என்பவருக்கும் சாதனாவுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
மனைவி கோயிலுக்கு செல்ல அவசர அவசரமாக புறப்பட்டு கொண்டு இருந்த போது கணவன் டீ போட்டுத்தர வற்புறுத்தியுள்ளார். இதற்கு மனைவி மறுத்ததால், இருவருக்கு இடையோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிபோக ஆத்திரமடைந்த கணவன், மனையின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கணவனை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மனைவியின் வீட்டார், சாதனா மீது சந்தேகம் கொண்டு மோஹித் அடிக்கடி தொந்தரவு அளித்ததாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளனர்.