மாணவிகள் ஹிஜாப் அணிய தடை…தனியார் கல்லூரி உத்தரவால் சர்ச்சை..!!

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் மும்பையிலும் நடந்துள்ளது.

மும்பை செம்பூரில் தனியாருக்கு சொந்தமான கலை, அறிவியல் மற்றும் காமர்ஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் நேற்று வழக்கம்போல் வந்தனர். அப்போது இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப், புர்கா அணிந்த படி வந்துள்ளனர். அவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாணவிகள் கல்லூரி வாசலில் நின்றனர்.

இதையடுத்து மாணவிகள், பெற்றோர்கள் கல்லூரியில் போராட்டத்தை நடத்தினர். கல்லூரியில் ஆடை கட்டுப்பாட்டு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஹிஜாப், புர்காவுடன் மாணவிகள் கல்லூரி வர அனுமதியில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

இதையடுத்து மாலையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியானது. அதில் ‛‛ கல்லூரி வரும் மாணவ-மாணவிகள் ஹிஜாப், புர்கா, ஸ்கார்வ்ஸ் அணிந்து வரலாம். ஆனால் கல்லூரிக்குள் நுழைந்தவுடன் அதனை மாற்றிவிட்டு வகுப்பறைக்கு செல்ல வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

RELATED ARTICLES

Recent News