மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் மாமன்னன்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, சாதனை படைத்தது. தற்போது, ஓடிடியில் வெளியாகியுள்ள இப்படம், அங்கும் பல சாதனைகளை படைத்து வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தை பார்த்த நடிகர் சிவக்குமார், தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் பதிவில் கூறியிருப்பது பின்வருமாறு:-
“தம்பி மாரிசெல்வராஜ்க்கு!. நான் மாமன்னன் படத்தை பார்த்தேன். இது படமில்லை. உங்கள் வாழ்க்கையில் நடந்த வலி. பாதிக்கப்பட்டவன் தான் இவ்வளவு ஆழமாக சொல்ல முடியும்.
திரைப்படம் மூலம் நீங்கள் சொல்ல வேண்டிய செய்தி அதிகம் இருக்கிறது. உங்களையும் வடிவேலுவையும் சந்தித்து ஆரத்தழுவ எண்ணுகிறேன்.
விரைவில் சந்திப்போம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி சார்”
இவ்வாறு அந்த பதிவில் அவர் பதிவிட்டுள்ளார்.