நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி ஹெல்மெட் அணியாததால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக இவருடைய மொபைலுக்கு குறுஞ்செய்தி வந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாகுல் ஹமீது இன்று காலை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆட்டோவில் ஹெல்மெட் அணியவில்லை என தனக்கு அபராதம் விதித்திருப்பதாக குற்றம் சாட்டிய அவர், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
ஆட்டோ ஓட்டுனருக்கு ஹெல்மெட் போடவில்லை என அபராதம் விதித்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.