பேஸ்புக்கில் பெண்களுக்கு ஹார்ட் எமோஜி அனுப்பினால் சிறை தண்டனை..!!

சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் எமோஜி அனுப்பினால் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையில் சவுதி மற்றும் குவைத் அரசுகள் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் காதலர்கள், தம்பதிகள், நண்பர்கள் தங்களுக்குள் அன்பை பரிமாறிக் கொள்ள இந்த ஹார்ட் எமோஜியை பயன்படுத்துவதுண்டு.

இந்நிலையில் அறிமுகமில்லாத பெண்களுக்கோ அல்லது துஷ்பிரயோகம் செய்யும் நோக்கிலோ இந்த ஹார்ட் எமோஜியை சிறை தண்டனை விதிக்கப்படும் என குவைத் அரசு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 2 ஆண்டு சிறை தண்டனையும், 2000 தினார் (ரூ.5,37,800) அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல சவுதியிலும் 2 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரியால் (ரூ.22 லட்சம்) அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News