ஓம் பிர்லா சபைக்கு வரவேண்டும் ! அழைப்பு விடுத்த எதிர்கட்சிகள்!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவைக்கு வரவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளன.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அவைக்கு வந்து அறிக்கை தர வேண்டும் அல்லது அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றம் செயல்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று இரண்டாவது நாளாகவும் அவைக்கு வரவில்லை.

அவையில் அமைதி நிலவும் வரையில் தான் அவைக்கு வரப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார். எனவே அவருக்கு பதிலாக மூத்த உறுப்பினர் ராஜேந்திர அகர்வால் அவையை இன்று நடத்தினார்.

அப்போது காங்கிரஸ் உறுப்பினர் அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும் போது, ‘ஓம் பிர்லா அவைக்கு வரவேண்டும் அவர் எங்களின் பாதுகாவலர்’ என்று கூறினார். அதனை பிற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களும் ஆமோதித்தனர்.

இதனிடையே, எதிர்க்கட்சிகளின் அமளியால் இன்றும் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கியது.

RELATED ARTICLES

Recent News