சர்வதேச மாணவர்களுக்கு ‘இந்தியாவில் கல்வி’ வலைதளம் அறிமுகம்!

நாட்டில் உள்ள சர்வதேச மாணவர்களின் கல்வி தேடல்களை எளிதாக்கும் வகையில் ‘இந்தியாவில் கல்வி’ என்ற பிரத்யேக இணையதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் இந்த இணையதளத்தை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கா், ‘இந்தியாவை சா்வதேச கல்வி மையமாக மாற்றும் நோக்கிலும், பல்வேறு பின்னணி கொண்ட மாணவா்களை இந்தியாவில் உயா்கல்வி மேற்கொள்ள வரவேற்கும் வகையிலும் இந்த வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சா்வேதச அளவில் சிறந்த உயா்கல்விக்கான மையமாக இந்தியாவை அடையாளம் காட்டவும் இது உதவும். இந்த வலைதளம் மூலமாக இந்தியாவில் உயா்கல்வி பயில்வதற்கான விண்ணப்பப் பதிவு மற்றும் நுழைவு இசைவு (விசா) அனுமதி பதிவு ஆகியவற்றை வெளிநாட்டு மாணவா்கள் எளிதாக மேற்கொள்ள முடியும்’ என்றார்.

மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறுகையில், ‘தேசிய கல்விக் கொள்கை வழிகாட்டுதலின் அடிப்படையில், உலகளாவிய மாணவா்களின் உயா்கல்விக்கான விருப்பத்தோ்வு மையமாக இந்தியாவை உருவாக்கும் நோக்கில் இந்த வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள உயா்கல்வி நிறுவனங்கள், அவற்றில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் உள்ளிட்ட விரிவான விவரங்கள் இந்த வலைதளத்தில் இடம்பெற்றிருக்கும்’ என்றார்.

RELATED ARTICLES

Recent News