அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்த கார்ல் டேவிஸ் (86),கடந்த 1961ம் ஆண்டு முதலே இங்கிலாந்தில் வசித்து வந்தார். இந்நிலையில் , புகழ்பெற்ற இசைக் கலைஞரான இவர் 1981ம் ஆண்டு வெளியான ‘தி ஃப்ரெஞ்ச் லெப்டினன்ட்ஸ் வுமன்’ படத்திற்காக ‘பாப்டா’ மற்றும் நோவெல்லோ விருதை வென்றார்.
இதனைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் பாதிக்கப்பட்ட கார்ல் டேவிஸ், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு நடிகையும், மனைவியுமான ஜீன் போட், இரண்டு மகள்கள் உள்ளனர். கார்ல் டேவிஸ் மரணம் குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று காலை மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் கார்ல் டேவிஸ் காலமானார். அவரது வியக்கத்தக்க இசையால் மிகவும் பெருமைப்படுகிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.