துப்பாக்கிச்சூடு நடத்திய பாஜக எம்.எல்.ஏ மகன்!

மத்திய பிரதேச மாநிலத்தில் சிங்குர்லி தொகுதி பாஜக எம்.எல்.ஏ ராம்லாலு மகன் விவேகானந்தன் (40) என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இச்சம்பவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் சாலையில் ஒரு தரப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட போது வாக்குவாதம் முற்றிய நிலையில் எம்.எல்.ஏ மகன் விவேகானந்தன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் சூரியகுமார் என்பவரின் வலது கையில் குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்தனார். பின்னர் அவரை அருகில் இருந்தவர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, வனத்துறை காவலர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் விவேகானந்தன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News