உத்தராகண்ட் மாநிலத்தின் ஏற்பட்ட நிலச்சரிவில் 12-க்கும் மேற்பட்டோர் காணவில்லை!

உத்தராகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், ருத்ரபிரயாக் பகுதியில் நேற்று கனமழையால் கவுரிகுந்த் என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தாழ்வான பகுதிகளில் 3 கடைகள் பலத்த சேதம் அடைந்தன. அந்தக் கடைகளுக்குள் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், 12-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

காணாமல் போனவர்களைக் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, போலீஸ், தீயணைப்புத் துறை உட்பட பல துறை வீரர்கள் சம்பவ பகுதியில் உள்ளனர் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற குழுக்களும் சம்பவ இடத்தில் இருப்பதாக பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறினார்.

இதனிடையே கேதார்நாத் யாத்திரையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News