இந்திய தலைநகர் டில்லி எதற்கு பெயர் பெற்றதோ இல்லையோ சமீப காலமாக காற்று மாசுக்கு பெயர் பெற்ற நகரமாக இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக காற்று மாசு கொண்ட பகுதியாக டில்லி இருக்கிறது.
இந்நிலையில் டில்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்களை எடுத்து வருகின்றன.
இதனால் டில்லி என்சிஆர் பகுதிகளில் இயங்கும் வாகனங்களுக்கான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி டில்லியில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பிஎஸ் 3 மற்றும் பிஎஸ்4 ரக டீசல் கார்கள் எதுவும் இயங்ககூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்6 ரக வாகனங்கள் மட்டுமே இயங்கலாம் மற்ற வாகனங்கள் டில்லிக்குள் இயங்க அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது.
மீறி இயங்கினால் அந்த வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.டில்லியில் காற்று தர குறியீடு 450க்கு சென்று விட்டது. இது காற்று மாசு மோசமான அளவில் இருக்கிறது என்பதை குறிப்பதாகும்.
அரசு அடுத்த 5 ஆண்டுகளில் டில்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த தீவிரமாக முயற்சிகளை செய்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 3 கட்டங்களாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதில் காற்று மாசுவில் கணிசமான முன்னேற்றம் தென்பட்டது. தற்போது காற்று தர குறியீடு 401 முதல் 405 வரையாக இருக்கிறது.
இந்த தடை வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது விதிக்கப்பட்ட தடை பிஎஸ்3 மற்றும் பிஎஸ்4 டீசல் கார்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் கார்கள் இயங்கலாம்.