ராகுல் காந்தியின் எம்.பி., பதவியை நீக்குவதில் காட்டிய அவசரத்தை மீண்டும் பதவி வழங்குவதில் ஏன் பாஜக அரசு காட்டவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ராகுல் காந்தியின் எம்.பி பதவி நீக்கத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தும் மீண்டும் ஏன் பதவி வழங்கவில்லை ? ராகுல் காந்தியின் எம்.பி., பதவியை நீக்குவதில் காட்டிய அவசரத்தை மீண்டும் பதவி வழங்குவதில் ஏன் பாஜக அரசு காட்டவில்லை? தகுதி நீக்கத்தை திரும்பப் பெற்றால் ராகுல் காந்தி பாராளுமன்றத்திற்கு வந்துவிடுவார் என்கிற அச்சமா ? இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலைமச்சர் மு.க. ஸ்டாலினின் இப்பதிவானதை, திமுக நிர்வாகிகள் குறிப்பிட்டு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.