மீண்டும் எம்.பி.யானார் ராகுல்காந்தி!

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி என பெயர் வந்தது எப்படி’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்மூலம் மோடி சமூகத்தினரை ராகுல் அவமதித்துவிட்டதாக, குஜராத் பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதில் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அன்று உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற தீா்ப்பு வெளியான அடுத்த ஒரு மணி நேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி மக்களவைத் தலைவா் ஓம் பிர்லாவை சந்தித்து ராகுலுக்கு எம்பி பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் ராகுல் காந்தி எம்.பி. பதவி தொடர்பாக மக்களவை செயலருக்கும் காங்கிரஸ் கடிதம் அனுப்பியது.

இந்த நிலையில் ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதிநீக்கம் வாபஸ் குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இன்று முடிவெடுப்பார் என காங்கிரஸ் தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்தை ரத்து செய்து அவருக்கு மீண்டும் எம்.பி. பதவியை மக்களவைத் செயலகம் இன்று வழங்கியுள்ளது. இதையடுத்து அவர் வயநாடு எம்.பி.யாக தொடர்வார் எனவும் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து மக்களவையில் நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் சார்பாக முதல் பேச்சாளராக ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

RELATED ARTICLES

Recent News