உத்தரபிரதேச மாநிலத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் நர்ஹி கிராமத்தை சேர்ந்த சரல் யாதவ் (வயது 19) என்ற இளைஞர் நேற்று இரவு இயற்கை உபாதை கழிக்க சென்ற 7 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
பாதிக்கப்பட்ட சிறுமி தன் தாயாரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.