தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று கேரள சட்டப்பேரவை கூட்டத்தை பார்வையிட்டு வருகிறார்.
நேற்று (திங்கட்கிழமை) கேரள சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில், பொது சிவில் சட்டத்துக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்து இன்று உரையாற்றினார்.
இந்நிலையில், தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் கேரள சட்டப்பேரவை கூட்டத்தின் நடைமுறையை இன்று பார்வையிட்டனர்.