யார் வல்லரசு என்பதில், உலக நாடுகள் மத்தியில் எப்போதும், போட்டி நிலவிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, அமெரிக்காவும், சீனாவும், இந்த போட்டியில் பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போட்டி ஊர்ஜிதப்படுத்தும் வகையில், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, இந்த செய்தி நிறுவனத்தை சேர்ந்த 5 செய்தியாளர்கள், சீனாவின் நடவடிக்கைகள் தொடர்பாக புலனாய்வு செய்து, செய்தி ஒன்றை தயார் செய்துள்ளனர்.
அதில், தனக்கு சாதகமான செய்திகளை வெளியிடுவதற்கு, சீனா அரசு, இந்தியாவை சேர்ந்த ஊடகத்திற்கு நிதியுதவி அளித்துள்ளதாம்.
இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஊடகங்களுக்கும், பணம் வழங்கப்பட்டுள்ளதாம். இந்த தகவல், பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.