‘தூக்கமே தேவையற்றது என நினைத்தேன்’…அனுபவத்தை பகிர்ந்த பில் கேட்ஸ்..!!

அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர் பில் கேட்ஸ். உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க நபராக பில் கேட்ஸ் இருந்து வருகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு 134 பில்லியன் டாலர்கள் ஆகும்.

இந்நிலையில் அண்மையில் அவர் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் தூக்கம் குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். “வாழ்வில் தூக்கம் என்பது சோம்பல் என்றும், அது தேவையற்றது என நான் எனது இளம் வயதில் நினைத்தேன். அதனால், குறைந்த அளவு தூங்கவும் முயற்சி செய்திருக்கிறேன்.

இப்போது என்னவென்றால் ஆழ்ந்த உறக்கம் ஆரோக்கியத்துக்கு அவசியம் என நாம் அறிகிறோம். அது இளம் வயதினருக்கும் அவசியம் தேவை” என அவர் தெரிவித்துள்ளார்.

பில் கேட்ஸ் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் சிறப்பிடத்தில் இருந்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News