வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டியான ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நமது பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக மாறி, உலக வளர்ச்சிக்கு 15% பங்களிக்கிறது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. 6.5 சதவீதமே தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.