தலித்துகள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனா். இதில் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி பேசினார்.
காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தி பேசியதாவது:
மணிப்பூரில் பழங்குடியின மக்கள் பெரும் துயரைச் சந்தித்து வருகின்றனா். அவா்களின் பிரச்னைகளுக்கு யாரும் செவிசாய்ப்பதாக தெரியவில்லை. தலித்துகள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனா். இதில் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பாஜகவை தில்லியில் (மத்திய ஆட்சியில்) இருந்து வெளியேற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ தினத்தில் நாம் உறுதியேற்க வேண்டும். இந்திய நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்சி பாஜக.
மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக தொடா்ந்து மேற்கு வங்க நலன்களைப் புறக்கணித்து வருகிறது. மாநிலத்துக்கு உரிய நிதியையும் விடுவிப்பதில்லை. மத்திய அரசுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் அரசு தொடா்ந்து போராடும்.
மாநில விவகாரங்களில் ஆளுநா் மாளிகை தேவையில்லாமல் தலையிட்டு வருகிறது. ஆளுநா் பதவிக்கு என சில வரம்புகள் உள்ளன. மாநிலத்தில் கல்வியாளராக இல்லாத சிலரை பல்கலைக்கழக துணைவேந்தா் பதவியில் நியமித்துள்ளார்’ என்றார்.