மதுரை திருநகரில் பேருந்து நிறுத்தம் அருகே மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக திருநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றினர்.
இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள CCTV கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது பிரபல பைக் திருடன் அலெக்ஸ் என்ற நபரை கைது செய்தனர்.
போதையில் அலெக்ஸ், உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளான். பின்னர் தலையில் கல்லைப் போட்டு கொன்றுவிட்டு மூதாட்டியின் காதணிகளை திருடிவிட்டு சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.