பல்வேறு ஒன்பிளஸ் பயனர்கள் தங்களது பழைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் “கிரீன் லைன்” பிரச்சினை இருப்பதாக குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதே பிரச்சினை பல்வேறு சாதனங்களில் ஏற்பட்டு இருப்பதை அடுத்து, ஒன்பிளஸ் நிறுவனம் இதனை சரிசெய்வதற்காக வாழ்நாள் ஸ்கிரீன் வாரண்டியை வழங்குகிறது.
ஒன்பிளஸ் 8 ப்ரோ, ஒன்பிளஸ் 8T, ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9R ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்கள், அவற்றில் “கிரீன் லைன்” ஏற்படும் பட்சத்தில் அவற்றை சரி செய்தற்கான கட்டணம் வாரண்டியில் இருந்து பிடித்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாழ்நாள் ஸ்கிரீன் வாரண்டி திட்டம் இந்தியாவில் வசிக்கும் ஒன்பிளஸ் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.