இந்தியாவின் இரும்பு மனிதர் எனப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 147-வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி பாஜக சார்பில் ஒற்றுமை ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் அக்கட்சியின் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் என பல்வேரு தரப்பினர் பங்கேற்றனர்.
காமராஜர் சிலையிலிருந்து துவங்கி குபேர் சிலை வரை நடந்த ஊர்வலத்தில், அனுமதிக்கப்பட்ட பகுதியை மீறி பாரதி பூங்கா நோக்கி செல்ல முயன்ற பாஜகவினரை போலீசார் அவர்களை தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர்.
அப்போது காலாப்பட்டு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பாஜகவினர் போலீசாருடன் அராஜகத்தில் ஈடுபட்டு, தடுப்புகளை தள்ளிவிட்டு முன்னேறி சென்ற அவர்கள்,
போலீசாரை பார்த்து துலைத்து விடுவேன் என பொதுவெளியில் மிரட்டல் விடுத்து சென்றார். பாஜகவின் இத்தகைய அராஜக செயல் போலீசாரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.