குஜராத்தில் லாரி மீது மினி வேன் மோதி விபத்து…10 பேர் பலி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி வேன் மோதியதில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

ராஜ்கோட்-அகமதாபாத் நெடுஞ்சாலையில் ஒரு லாரி பழுதாகி நின்று கொண்டு இருந்தது. அந்த லாரி மீது மினி வேன் மோதியது.

இந்த விபத்தில் 3 குழந்தைகள் 5 பெண்கள் உள்பட 10 பேர்உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

RELATED ARTICLES

Recent News