ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 4-வது முறையாக இந்தியா சாம்பியன்!

சென்னையில் நடைபெற்ற 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கியின் இறுதி போட்டியில் மலேசியாவை 4 – 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இப்போட்டியில் இந்தியா சாம்பியனாவது இது 4-வது முறையாகும். இதற்கு முன் 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியா வாகை சூடியிருந்தது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் காலிறுதியில் ஜுக்ராஜ் சிங் கோலடித்து இந்தியாவை ஆரம்பத்திலேயே முன்னிலைப்படுத்தினார். சில நிமிடங்களில் மலேசியாவின் கமல் அபு அர்சாய் கோல் அடித்து 1-1 என்று சமன் செய்தார். பின்னர் மலேசியாவின் ரஸி ரஹீம் மற்றும் அமினுதின் முஹமட் ஆகியோர் பெனால்டி கார்னரை கோலாக மாற்ற, 3-1 என்று கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஒருகட்டத்தில் 3 – 1 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த இந்திய அணி கடைசி 17 நிமிடங்களில் 3 கோல்கள் அடித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங், குர்ஜந்த், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் கோலடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார்.

எஞ்சிய நேரத்தில் மலேசியாவின் கோல் வாய்ப்புகளை தடுத்து அரண் அமைத்த இந்தியா, இறுதியில் 4-3 கோல் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது.

இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

RELATED ARTICLES

Recent News