பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக அன்வார்-உல்-ஹக் தேர்வு!

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக அன்வார்-உல்-ஹக் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் நாடாளுமன்றம் ஆயுள் காலம் நிறைவடைவதற்கு 3 நாள்களுக்கு முன்னதாகவே கடந்த புதன்கிழமை கலைக்கப்பட்டது.

புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும்வரை நாட்டின் பொறுப்பை நிர்வகிக்க இடைக் காலப் பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தையை எதிர்க் கட்சிகளுடன் பிரதமர் ஷாபாஷ் ஷெரீஃபும் நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பிஏபி கட்சி எம்.பி. அன்வார்-உல்-ஹக்கின் பெயரை ஷாபாஸ் ஷெரீஃப் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ராஜா ரியாஸ் பரிந்துரைத்தனர். இதற்கு அதிபர் ஆரிஃப் ஆல்வி உடனடியாக ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, நாட்டின் இடைக்கால பிரதமராக அன்வார்-உல்-ஹக் பொறுப்பேற்க இருக்கிறார்.

RELATED ARTICLES

Recent News