இந்திய பண பரிமாற்றத்திற்கு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் உலக நாடுகள் மாறிவரும் நவீன யுகத்திற்கு ஏற்றபடி, கிரிப்ப்டோ கரன்சிகளின் பயன்பாட்டை அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் இந்தியாவிலும் டிஜிட்டல் பணம் அறிமுகம் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்த நிலையில், இன்று சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மேலும் இதன் வெற்றியைத்தொடர்ந்து அனைத்து பண பரிமாற்றங்களுக்கும் டிஜிட்டல் கரன்சி பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக நாட்டின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ, பாங்க் ஆஃப் இந்தியா, உள்ளிட்ட 9-வங்கிகளில் டிஜிட்டல் கரன்சியை இன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.