சிம்லாவில் நிலச்சரிவு: 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சம்!

சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரியில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சிம்லா நகரில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் புதைந்துள்ளன. இதில் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சிம்லா மற்றும் சண்டிகரை இணைக்கும் சிம்லா-கல்கா தேசிய நெடுஞ்சாலையில் கோட்டி அருகே சக்கி மோர் என்ற இடத்தில் சாலைப் பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது. செயின்ட் எட்வர்ட்ஸ் பள்ளிக்கு அருகிலும் நிலச்சரிவு ஏற்பட்டது, இந்த நிலச்சரிவின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது.

மண்டியில் அதிகபட்சமாக 236, சிம்லாவில் 59 மற்றும் பிலாஸ்பூர் மாவட்டத்தில் 40 என மொத்தம் 452 சாலைகள் இப்போது வாகனப் போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளன என்று மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலச்சரிவில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன.

RELATED ARTICLES

Recent News