தாடி வளர்த்து கின்னஸ் சாதனை ! 30 சென்டிமீட்டர் நீளத்தில் முதலிடம் பிடித்த இளம்பெண்!

அமெரிக்காவின் மிக்சிகனை சேர்ந்தவர் எரின் ஹனிகட் (38). இவரின் உடம்பில் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்ற பிரச்சினை இருந்ததால் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு கருவுறாமை மற்றும் அதிகப்படியான முடி வளர்ச்சியை ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்துள்ளர். இதனால் எரினுக்கு தனது 13 வயதிலேயே முகத்தில் முடி வளர ஆரம்பித்துள்ளது.

ஒரு நாளைக்கு 3 முறை ஷேவிங் செய்தும், முடி அகற்றும் பொருட்களைப் பயன்படுத்தியும் தனது முகத்தில் வளரும் தாடியை எரின் கட்டுப்படுத்தி வந்துள்ளார். இருந்தும் முகத்தில் முடி வளர்ந்து கொண்டே இருந்துள்ளது. மேலும் ,உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டதால், கண் பக்கவாதம் காரணமாக தனது பார்வையையும் இழந்துள்ளார். அவரது கால்களில் ஒன்றின் கீழ் பாதி துண்டிக்கப்பட்டது. இதன் பின்னர், சவரம் செய்வதை நிறுத்தி விட்டார் எரின், கொரோனா காரணமாக உலகம் முடங்கிய நிலையில் தனது தாடியை மீண்டும் வளர்க்க எரின் முடிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது தனது தாடியை 30 செமீ வளர்த்து உலகில் மிக நீளமான தாடியை கொண்ட பெண்மணி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் எரின். இதற்கு முன் 25.5 செமீட்டர் நீளமான தாடி என்ற சாதனையை 75 வயதான விவியன் வீலர் என்பவர் வைத்திருந்தார். இதனை எரின் தற்போது முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News