தனி ஒருவன், வேலைக்காரன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் தான் இயக்குநர் மோகன் ராஜா. இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், விஜய்-க்கு தான் ஒரு கதை கூறியதாகவும், அந்த கதையில் அவருக்கு இரட்டை வேடம் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், அந்த சமயத்தில் வெளியான அருண் விஜய் நடித்த தடம் படத்தின் கதையும், இந்த படத்தின் கதையும், ஓரளவு ஒரே மாதிரி இருந்ததால், விஜய் அக்கதையை நிராகரித்தார் என்று கூறியுள்ளார்.
ஆனால் தற்போது அந்த படத்தின் திரைக்கதையை மாற்றி உள்ளதாகவும் அதுமட்டுமின்றி விஜய்க்கு வேறு இரண்டு கதைகளை தயாராக வைத்திருப்பதாகவும், விரைவில் இதில் ஏதாவது ஒரு படத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.