பிரதமர் மோடி அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அடுத்த ஆண்டு மீண்டும் தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றுவார். ஆனால் அவர் அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் என கூறினார்.
ஒவ்வொரு நபரும் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மீண்டும் வருகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் வெற்றி பெற வைப்பது, தோல்வி அடைய செய்வது மக்கள் கையில் உள்ளது. 2024ல் மீண்டும் தேசியக் கொடியை ஏற்றுவேன் என்று கூறுவது ஆணவத்தை காட்டுகிறது.
சுதந்திர தினத்தன்று கூட எதிர்க்கட்சிகள் குறித்து கருத்து தெரிவிப்பது சரியல்ல. அவர் எப்படி நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார். இவ்வாறு அவர் கூறினார்.