பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் அன்புமணி ராமதாஸ். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-
“இயக்குனர் தங்கர் பச்சானின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் ’கருமேகங்கள் கலைகின்றன’ என்ற திரைப்படத்தின் முன்னோட்டம் பார்த்தேன்.
இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கவுதம் மேனன், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளின் மேன்மையை பேசும் உன்னத படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
செப்டம்பர் 1-ஆம் நாள் வெளியாகவிருக்கும் அத்திரைப்படத்தை திரையரங்கில் காண்பதற்கு நான் ஆவலாக இருக்கிறேன்.”
இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.