பாலிவுட் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்-களில் ஒருவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் 2.0, கலாட்டா கல்யாணம் உள்ளிட்ட ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார். பாஜகவின் தீவிர ஆதரவாளரான இவர், கடந்த 2000-ஆம் ஆண்டு கனடா நாட்டின் குடியுரிமையை பெற்றிருந்தார்.
மேலும், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டிருந்தபோது, கனடா நாட்டில் விரைவில் குடியேற உள்ளேன் என்றும் கூறியிருந்தார். இது, இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஒரு இந்திய குடிமகனுக்கு வேறொரு நாட்டில் குடியுரிமை இருக்கக் கூடாது என்றும், வாக்களிக்கும் உரிமை இருக்கக் கூடாது என்றும் கூறி வந்தனர். இதுதொடர்பாக எதிர்கட்சியினரும், அவ்வப்போது குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர்.
பாஜக அரசிடம் நெருக்கமாக இருப்பதால் தான், அக்ஷய் குமாரின் இந்திய குடியுரிமைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறி வந்தனர். இதனால், அவரது கனடா நாட்டு குடியுரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு அன்று, அவர் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தார்.
பின்னணி பணிகள் அனைத்து முடிந்த நிலையில், நேற்று சுதந்திர தினத்தன்று, அவருக்கு இந்திய குடியுரிமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.