ஜெயிலரில் ரஜினிக்கு பாடிகாட் கதாபாத்திரத்தில் நடித்தவர் சுகந்தன். இவர் 2.O, தெறி, பைரவா, டாக்டர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெயிலர் படத்தில், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஒரு காட்சியை குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதில், ரஜினி சார் சிகரெட் பற்ற வைத்தவிட்டு தீப்பெட்டியை தன்னிடம் தூக்கி வீசுவது போன்ற காட்சியில் ரஜினி சாரின் ஸ்டைலை பார்த்து அசந்துவிட்டதாகவும், இந்த காட்சியை தனது வாழ்நாளில் மறக்கவே முடியாது என்றும் சுகந்தன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஸ்டைலில் மயங்காதவர்கள் உண்டா? என்ன?