பாகிஸ்தானில் பெட்ரோல்,டீசலின் விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நீண்டகாலமாக பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி இருந்து வருகிறது.இந்நிலையில்,அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.இதனைத்தொடர்ந்து,பாகிஸ்தானில் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.290-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.293-க்கும் விற்கப்படுகிறது. இதற்கு முன்னால், எப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.40 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.