சேரன் நடிப்பில், இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் தமிழ்குடிமகன்.
சாதியை வன்கொடுமையை மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படம், வரும் 1-ஆம் தேதி அன்று, ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் தங்கர் பச்சன், மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
அப்போது பேசிய தங்கர் பச்சன், சாதிய கொடுமைகளை திரைப்படங்களால் நீர்த்து போகச் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.
மேலும், தான் அனுபவித்த வலியை சொல்கிறேன் என்று, இருதரப்பினருக்குள்ளும் பிரிவை ஏற்படுத்திவிடக் கூடாது என்றும், இருதரப்பினரையும் எப்படி இணைக்க முடியும் என்கிற வகையிலேயே தான் படங்களை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தங்கர் பச்சனின் இந்த பேச்சு, மேடையில் இருந்த இயக்குநர் மாரி செல்வராஜை விமர்சிப்பதாக தான் இருந்தது என்று இணையத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.