சேலம் மாவட்டத்தில் பெங்களூரில் இருந்து வேகமாக வந்த டெம்போ வேன் ஒன்றை உணவு பாதுகாப்பு துறை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் தக்காளி பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அந்த வாகனத்தை முழுமையாக சோதனை செய்த போது மூட்டை மூட்டையாக பான் பராக் குட்கா இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சோதனையில் சுமார் 700 கிலோ பான்பராக் குட்கா பொருட்கள் சுமார் 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, குட்கா கடத்தல் தொடர்பாக டெம்போ லாரி ஓட்டுநரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட வேன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்தார்.