இப்படி ஒரு கணவன் இருந்தால் எல்லாம் பாசிபிள் தான்..!

அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் மஞ்சிமா மோகன். இவர்,
தேவராட்டம் படத்தில் நடித்த போது கெளதம் கார்த்திக்கை காதலித்து வந்தார். உடல் எடை அதிகரித்த நிலையில் படவாய்ப்பு குறைந்ததால், கடந்த ஆண்டு கெளதம் கார்த்திக்கை திருமணம் செய்துகொண்டார்.

சமீபத்தில், தான் ஒல்லியாக மாறிய புகைப்படத்தை இவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். தற்போது மேலும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் மஞ்சிமா மோகன் ஒர்கவுட் செய்வதற்கு கவுதம் கார்த்திக் உதவுவது போன்று உள்ளது.

அத்துடன் ”இது எளிதானது அல்ல. ஆனால் எதுவும் சாத்தியமற்றது இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். முயற்சி செய்யுங்கள். யாரும் உங்களை தடுக்க முடியாது,” என்று பாசிட்டிவ்வான கேப்ஷனயும் பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News