அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி மனு – மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

மதுரையில் பிரமாண்டமாக அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதன்முறையாக இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இதற்கிடையில் சிவகங்கையைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 4 மாதத்திற்கு முன் மாநாட்டிற்கு அறிவிப்பு செய்து விட்டனர்; ஆனால் கடைசி நேரத்தில் தடை கோரினால் எவ்வாறு முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

RELATED ARTICLES

Recent News