விபச்சாரி, கள்ளக்காதலி என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஈவ் டீசிங், விபச்சாரி, கள்ளக்காதலி போன்ற வார்த்தைகளை வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் பயன்படுத்தக் கூடாது என்றும் அதற்கு மாற்றாக வேறு சொற்களை பயன்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக 30 பக்கங்களை கொண்ட கையேட்டை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

விபச்சாரம், விபச்சாரி என்ற வார்த்தைகளுக்கு பதிலாக ‘பாலியல் தொழிலாளி’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

கள்ளக்காதலி என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் “ஒரு ஆணுடன் காதல் அல்லது திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொண்ட ஒரு பெண்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்த வேண்டும்.

ஈவ் டீசிங் என்ற சொல் இனி “பொதுவெளியில் பாலியல் துன்புறுத்தல்” என்று அழைக்கப்படவேண்டும். House Wife என்ற சொல்லுக்குப் பதிலாக, “ஹோம் மேக்கர்” என்று பயன்படுத்தப்பட வேண்டும். இது போன்ற வார்த்தைகள் அடங்கிய 30 பக்கங்களை கொண்ட கையேட்டை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News