திமுக எங்களின் பகையாளி மாஜி அமைச்சர் ஜெயக்குமார்..!

அண்மையில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சர் கேஎன்.நேரு தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய அவர், பிரிந்து கிடக்கும் அதிமுக-வை பாஜக- சேரவிடாமல் தடுக்க முயற்சி செய்கிறது எனக் கூறினார். மேலும் அதிமுகவும் திமுகவும் அண்ணன் தம்பி என பேசியிருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவும், அதிமுகவும் அண்ணன் தம்பியாக இருந்தது. ஆனால் எல்லாம் 1972-ஆம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது. மேலும் திமுக தான் எங்களின் அரசியல் எதிரி என பதிலடி கொடுத்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News